/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம்
/
துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம்
ADDED : ஆக 08, 2024 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் துணை தாசில்தார் அலகில் பணிபுரியும் 2 அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் எல் பிரிவில் தலைமை உதவியாளராக பணிபுரிந்த கனகபூரணி, உளுந்துார்பேட்டை தாசில்தார் அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், உளுந்துார்பேட்டையில் மண்டல துணை தாசில்தாராக பணிபுரிந்த மணி, கலெக்டர் அலுவலகத்தில் எல் பிரிவு தலைமை உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்டத்தில் துணை தாசில்தார் அலகில் பணிபுரியும் இரண்டு பேரை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் பிரசாந்த் உத்தரவிட்டுள்ளார்.