/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வேட்பாளர்கள் செலவு தொகை நிர்ணயம்
/
வேட்பாளர்கள் செலவு தொகை நிர்ணயம்
ADDED : மார் 23, 2024 05:49 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் பிரசாரத்தின் போது பயன்படுத்தும் பொருட்கள், தங்கும் அறை மற்றும் சாப்பாடு என வேட்பாளர்கள் மேற்கொள்ளும் செலவின பொருட்களுக்கான தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வேட்பாளர்கள் செலுவு செய்ய இனங்களுக்கு தேர்தல் ஆணையம் தொகை நிர்ணயத்துள்ளது. அதன்படி கட்சியினருக்கு சாப்பாட்டிற்கான செலவில் இட்லி 8 ரூபாய், தோசை 25, சாப்பாடு 80, சிக்கன் பிரியாணி 110, மட்டன் பிரியாணி 200 ரூபாய் என உணவுகளின் வகைகளை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், திறந்த வெளி பொதுக்கூட்டத்திற்காக அமைக்கப்படும் சாதாரண மேடைக்கு நாள் ஒன்றுக்கு 500 ரூபாய், துணி கொடி 3, பிளாஸ்டிக் கொடி 1.50, கொடி கம்பத்திற்கு 50 ரூபாய் எனவும், (சதுரஅடி அளவில்) ஷாமியானா பந்தல் 3, பேனர் 12 ரூபாய் எனவும் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சுவர் விளம்பரத்திற்கு, (சதுர மீட்டர் அளவில்) வெள்ளை நிறத்தில் 33.65 ரூபாய், பல வண்ண நிறங்களில் அடிக்க 50.50 ரூபாய் எனவும், (100 போஸ்டர்கள்) ஒரே நிறத்தில் அச்சடிக்க 1,500 ரூபாய், பல வண்ணங்களில் அச்சடிக்க 1,750 ரூபாய் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர வேன், கார், ஆட்டோ, லைட்டுகள், ஸ்பீக்கர், ஆம்பிளிபையர், ேஹாட்டலில் தங்குதல், பிரசாரத்திற்கு பயன்படுத்தும் 'டிவி' என அனைத்திற்கும் தனி, தனியாக விலை நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது.

