/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
60 ஆண்டுகளுக்கு பின் நடந்த தேரோட்டம் சின்னசேலத்தில் பக்தர்கள் பரவசம்

ADDED : மார் 12, 2025 06:57 AM

சின்னசேலம்,: சின்னசேலத்தில் 60 ஆண்டுகளுக்கு பின்பு தேரோட்டம் நடந்தது.
சின்னசேலம் காமாட்சி அம்மன் சமேத கங்காதீஸ்வரர் மற்றும் அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத கல்யாண வரதராஜ பெருமாள் கோவில்கள் உள்ளன.
இக்கோவில்களில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு தேர் திருவிழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது. கடந்த 8ம் தேதி பெருமாள் மற்றும் சிவனுக்கு அபிஷேகத்துடன் யாகசாலை பூஜையுடன்விழா துவங்கியது.தொடர்ந்து சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, பல்வேறு வாகனங்களில்பெருமாள் வீதி உலா நடந்தது. இதே போல் சிவன் கோவிலில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடத்தப்பட்டது.
விழாவின் முக்கிய நிகழ்வான திரு தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் பெருமாள் மற்றும் சிவன் கோவில்களில் தனித்தனியே அலங்கரிக்கப்பட்ட தேரில் நகரின் முக்கிய வீதிகளில் தேர் வடம் பிடிக்கப்பட்டது. 60ஆண்டுகளுக்கு பிறகு நடந்த திருவிழாவில் பக்தர்கள், பொதுமக்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து சுவாமி தரிசனம் செய்தனர்.