/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பள்ளம் தோண்டி மூடியதால் கிறுகிறுத்த போலீஸ்
/
பள்ளம் தோண்டி மூடியதால் கிறுகிறுத்த போலீஸ்
ADDED : ஆக 21, 2024 07:20 AM
மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அருகே மலைப்பகுதியில் பள்ளம் தோண்டி மூடிய தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த பொருவலுார், மோடாங்கல் மலைப்பகுதியில் நேற்று மர்மமான முறையில் தோண்டப்பட்ட பள்ளம் மண் போட்டு மூடப்பட்டிருந்தது.
இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் யாரோ கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகமடைந்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
தகவலறிந்த மூங்கில்துறைப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் மற்றும் போலீசார், வி.ஏ.ஓ., முருகன் ஆகியோர் நேரில் சென்று குழியை தோண்டிப் பார்த்தனர்.
குழியில் ஒன்றும் இல்லாததால் அதுவரை டென்ஷனாகி கிறுகிறுத்த போலீசார் நிம்மதியுடன் திரும்பிச் சென்றனர். யாரோ வேண்டுமென்றே இது போன்று பள்ளம் தோண்டி மூடியது தெரியவந்தது.