/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
'தினமலர்- நீட்' மாதிரி தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியீடு
/
'தினமலர்- நீட்' மாதிரி தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியீடு
'தினமலர்- நீட்' மாதிரி தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியீடு
'தினமலர்- நீட்' மாதிரி தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியீடு
ADDED : ஏப் 30, 2024 08:02 AM
கள்ளக்குறிச்சி: 'தினமலர்' நாளிதழ், ஏ.கே.டி., - ஐ.ஐ.டி., நீட் அகாடமி நிறுவனத்துடன் இணைந்து நடத்திய 'நீட்' மாதிரி தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற மருத்துவ படிப்புகளுக்கு 'நீட்' தேர்வு வரும் மே மாதம் 5ம் தேதி நடைபெற உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவியர்கள் பலர் 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் 'நீட்' தேர்வை அச்சமின்றி எதிர்கொள்ளும் வகையில் 'தினமலர்' நாளிதழ், ஏ.கே.டி., - ஐ.ஐ.டி., நீட் அகாடமி நிறுவனத்துடன் இணைந்து 'நீட்' மாதிரி தேர்வை நேற்று முன்தினம் நடத்தியது.
இதில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவியர்கள் பலர் முன்பதிவு செய்து பங்கேற்றனர். அரசு பள்ளிகளில் தமிழ்மொழி பாடத்தில் பயின்ற மாணவ மாணவிகளின் நலனுக்காக தமிழ்மொழி, தனியார் பள்ளி மாணவர்களுக்காக ஆங்கில மொழி என இரண்டு மொழிகளில் மாதிரி தேர்வு நடத்தப்பட்டது.
மாதிரி தேர்வு என்றாலும் தேசிய தேர்வு முகமை வகுத்துள்ள கட்டுப்பாடுகள் முழுமையாக கடைபிடிக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது.
தொடர்ந்து, நீட் மாதிரி தேர்வு முடிவுகள் நேற்று மாலை 6:00 மணிக்கு www.aktinstitutions.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதில் மாணவி திருக்கோவிலுார் சுஜிதா 720 மதிப்பெண்ணுக்கு 589 மதிப்பெண் பெற்று முதலிடம், மாணவி தென்கீரனுார் எஸ்.ஹரணி 511 பெற்று இரண்டாமிடம், மாணவி நீலமங்கலம் ேஹமபாலா 484 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம், கள்ளக்குறிச்சி எஸ்.வி.ஹரணி 476, மாணவர் உளுந்துார்பேட்டை கைலேஷ்கிரண் 473 மதிப்பெண் பெற்று அடுத்தடுத்த இடத்தை பிடித்தனர்.

