/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விதைப்பண்ணை வயல்கள் வேளாண் இயக்குனர் ஆய்வு
/
விதைப்பண்ணை வயல்கள் வேளாண் இயக்குனர் ஆய்வு
ADDED : ஆக 08, 2024 11:30 PM

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலுார் பகுதி விதை பண்ணை வயல்களை வேளாண் துணை இயக்குனர் ஆய்வு செய்தார்.
திருக்கோவிலுார் வட்டாரத்தில் நிலக்கடலை, கம்பு, ராகி உள்ளிட்ட பயிர்களில் விதைப்பண்ணை அமைந்த வயல்களை வேளாண்மை துணை இயக்குனர் பெரியசாமி ஆய்வு செய்தார். தொடர்ந்து விதைப்பண்ணை அமைத்துள்ள விவசாயிகளிடம், வயல்களை சுத்தமாக வைத்திருந்து நல்ல தரமான விதைளை உற்பத்தி செய்ய வேண்டும். அவ்வாறு செய்வதால், விவசாயிகளுக்கு விதை உற்பத்திக்காகவும் மற்றும் சான்று விதை விநியோகத்திற்கும் சுத்தமான, கலப்பு இல்லாத விதைகளை வழங்க முடியும் என தெரிவித்தார்.
ஆய்வின்போது வேளாண்மை உதவி இயக்குனர் கிருஷ்ணகுமாரி, வேளாண்மை துணை அலுவலர் மொட்டையப்பிள்ளை, உதவி விதை அலுவலர் தவமணி உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.