/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தேர்தலையொட்டி சட்டசபை தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு
/
தேர்தலையொட்டி சட்டசபை தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு
தேர்தலையொட்டி சட்டசபை தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு
தேர்தலையொட்டி சட்டசபை தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு
ADDED : ஏப் 09, 2024 06:10 AM

கள்ளக்குறிச்சி: லோக்சாப தேர்தலையொட்டி மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளுக்கும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கலெக்டர் தலைமையில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதிக்குட்பட்ட உளுந்துார்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி (தனி) ஆகிய 4 சட்டசபை தொகுதிகள் உள்ளது. தச்சூர் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு பாதுகாப்பு அறை திறக்கப்பட்டு, சுழற்சி முறையில் 4 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. இதில், 4 சட்டசபை தொகுதியில் உள்ள 1,274 ஓட்டுச்சாவடி மையங்களுக்கு 3,056 பேலட் யூனிட், 1,528 கன்ட்ரோல் யூனிட், 1,655 வி.வி.பேட் இயந்திரங்கள் அனைத்தும் மூடி முத்திரையிடப்பட்டு வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டது.
டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) சங்கர், மகளிர் திட்ட அலுவலர் சுந்தர்ராஜன், தேர்தல் தனி தாசில்தார் பசுபதி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், கூடுதல் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
உளுந்துார்பேட்டடை சட்டசபை தொகுதிக்கு உளுந்துார்பேட்டை பி.டி.ஓ., அலுவலகம், ரிஷிவந்தியம் சட்டசபை தொகுதிக்கு அரியலுார் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியிலும், சங்கராபுரம் சட்டசபை தொகுதிக்கு அங்குள்ள அரசு தொழில்நுட்ப கல்லுாரியிலும், கள்ளக்குறிச்சி தொகுதிக்கு, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பாதுகாப்பு அறையிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

