/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நிலம் தொடர்பாக தகராறு; மூன்று பேர் மீது வழக்கு
/
நிலம் தொடர்பாக தகராறு; மூன்று பேர் மீது வழக்கு
ADDED : ஆக 22, 2024 11:59 PM
கள்ளக்குறிச்சி : சின்னசேலம் அருகே நிலம் தொடர்பான தகராறில் மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சின்னசேலம் அடுத்த மரவானத்தம் குன்றுகாடு சேர்ந்தவர் முருகேசன்,52; அதே ஊரைச் சேர்ந்தவர் சுப்ரமணி. இருவருக்கும் நிலம் சம்மந்தமாக பிரச்சனை ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், கடந்த ஜூலை 24 ம் தேதி இரவு 10 மணியளவில் முருகேசன் வீட்டிற்கு நடந்து சென்றபோது, சுப்ரமணி, அவரது மனைவி செல்வி, தாய் வனம்மாள் ஆகியோர் சேர்ந்து திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது குறித்து முருகேசன் கொடுத்த புகாரின் பேரில் சுப்ரமணி உள்ளிட்ட மூன்று பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.