/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
டாஸ்மாக் மதுக்கடைகள் அருகிலேயே அதிரடி காட்டும் போலீசால் அதிருப்தி
/
டாஸ்மாக் மதுக்கடைகள் அருகிலேயே அதிரடி காட்டும் போலீசால் அதிருப்தி
டாஸ்மாக் மதுக்கடைகள் அருகிலேயே அதிரடி காட்டும் போலீசால் அதிருப்தி
டாஸ்மாக் மதுக்கடைகள் அருகிலேயே அதிரடி காட்டும் போலீசால் அதிருப்தி
ADDED : ஆக 27, 2024 04:26 AM
கள்ளக்குறிச்சி பகுதி டாஸ்மாக் மதுக்கடைகள் அருகேயே போலீசார் ஆய்வு செய்து அதிரடி காட்டுவதால் குடிமகன்கள் புலம்பி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சியில் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்ற பின், இதுவரை மதுபானம் குடித்து வாகனம் ஓட்டியதாக 100க்கும் வழக்குகளை பதிவு செய்துள்ளார். அனைவருக்கும் ரூ.10,000 அபராதம் விதிப்பதுடன், மேலும் பல்வேறு பிரிவுகளில் வழக்குகளை சேர்த்து, அபராதத் தொகையை கூட்டி வருகிறார்.
கள்ளக்குறிச்சி பகுதியில் 10க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. ஒன்றிரண்டு கடைகளில் மட்டுமே பார்கள் உள்ளன.
மற்ற இடங்களில் மதுபிரியர்கள் சரக்கு வாங்கி செல்வதுடன், பலரும் கடைக்கு அருகேயே சாலையோரங்களில் அமர்ந்து குடித்துவிட்டும் செல்கின்றனர்.
இந்நிலையில், டாஸ்மாக் கடைக்கு சிறுது துாரத்தில் இன்ஸ்பெக்டர் ராபின்சன் மற்றும் போலீசார் நின்று கொண்டு வாகன சோதனையில் ஈடுபட்டு அவ்வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகளிடம் அதிரடி காட்டி வழக்கு பதிந்து வருகின்றார்.
பைக்கை நிறுத்தி சோதனையிடுவதால் குடும்பத்துடன் செல்லும் வாகன ஓட்டிகள் பலரும் பாதிப்படைகின்றனர்.
கள்ளக்குறிச்சி பகுதியின் பல இடங்களிலும் பொது இடங்களில் மதுபானம் குடிப்பது வாடிக்கையாக இருந்து வருகிறது. அதுபோன்ற இடங்களுக்கு சென்று பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதை விடுத்து டாஸ்மாக் கடைகளுக்கு அருகேயே தினமும் வாகன சோதனை என்ற பெயரில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதாக டிடி பிரிவில் வழக்குப்பதிந்து ரூ.10,000 அபராதம் விதிக்கும் போலீசாரின் நடவடிக்கை பொதுமக்கள் பலரையும் பாதிப்படைய செய்து வருகிறது.
டாஸ்மாக் மதுக்கடை பகுதியில் வாகன சோதனை என்ற பெயரில் அதிரடி காட்டுவதற்கு பதிலாக பொது இடங்களில் குடிப்பவர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை எடுக்க போலீஸ் உயர் அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும்.