/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குடிநீர் தட்டுப்பாடு நிலவும் பகுதியில் சீரான முறையில் குடிநீர் விநியோகம்
/
குடிநீர் தட்டுப்பாடு நிலவும் பகுதியில் சீரான முறையில் குடிநீர் விநியோகம்
குடிநீர் தட்டுப்பாடு நிலவும் பகுதியில் சீரான முறையில் குடிநீர் விநியோகம்
குடிநீர் தட்டுப்பாடு நிலவும் பகுதியில் சீரான முறையில் குடிநீர் விநியோகம்
ADDED : மே 03, 2024 12:03 AM
கள்ளக்குறிச்சி : தினமலர் செய்தி எதிரொலியாக குடிநீர் தட்டுபாட்டினை தடுக்கும் பொருட்டு கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலம் சீரான முறையில் குடிநீர் விநியோகத்திற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடும் வறட்சியால், பல்வேறு பகுதிகளில் நாளுக்கு நாள் குடிநீர் தட்டுபாடு அதிகரித்து வருகிறது.
எனவே மக்கள் பாதிப்படையாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. அதன், எதிரொலியாக குடிநீர் தட்டுபாடு நிலவும் பகுதிகளில் சீரான குடிநீர் விநியோகத்திற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்டம் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மாவட்டத்தில் மூன்று நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் 412 கிராம ஊராட்சிகளில் பல்வேறு குடியிருப்புகள் உள்ளன. இதில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் தென்பெண்ணை ஆற்றினை நீர் ஆதாரமாக கொண்ட 4 கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலம் மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி நகராட்சி, சின்னசேலம், தியாகதுருகம் பேரூராட்சிகள் 116 வழியோர கிராமங்களுக்கு கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
நான்கு கூட்டு குடிநீர் திட்டங்களின் மூலம் 9.51 மில்லியன் லிட்டர் குடிநீர் நாள்தோறும் சீரான முறையில் மாவட்டத்தில் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.