/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கல்
/
பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கல்
பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கல்
பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கல்
ADDED : செப் 18, 2024 06:13 AM
கள்ளக்குறிச்சி: பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளையொட்டி பா.ஜ., சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ஜ., சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் 74வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் நடந்த நிகழ்ச்சிக்கு பா.ஜ., மாவட்ட தலைவர் அருள் தலைமை தாங்கி பொதுமக்கள் பலருக்கு அன்னதானம் வழங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் ராஜேஷ், துணை தலைவர் சர்தார் சிங், மாவட்ட பொருளாளர் குமரவேல், மாவட்ட செயலாளர் சதிஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில், மாநில சிறுபான்மை அணி பொருளாளர் ஸ்ரீசந்த், மாநில துணை தலைவர் அசோக்குமார், மாவட்ட பொதுச் செயலாளர் தியாகராஜன், விவசாய அணி திட்ட பொறுப்பாளர் குருமூர்த்தி, உள்ளாட்சி பிரிவு மாவட்ட தலைவர் ராஜேந்திரன், சிந்தனையாளர் பிரிவு மாவட்ட தலைவர் வில்சன், மாவட்ட நெசவாளர் பிரிவு தலைவர் அங்கமுத்து ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும் மத்திய அரசு நலத்திட்ட பிரிவு துணை தலைவர் பிரேம்ராஜ், துணை தலைவர் கிருஷ்ணவேணி, ஒன்றிய செயலாளர் லதா, ஆன்மிகப் பிரிவு மாவட்ட துணை தலைவர் தர்மசிங், சிந்தனையாளர் பிரிவு துணை தலைவர் ராமச்சந்திரன், தமிழ் இலக்கிய பிரிவு மாவட்ட செயலாளர் ராஜா உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.