தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மாவட்ட இறகு பந்து சங்க செயல் வீரர்கள் கூட்டம்

மாவட்ட இறகு பந்து சங்க செயல் வீரர்கள் கூட்டம்

மாவட்ட இறகு பந்து சங்க செயல் வீரர்கள் கூட்டம்


ADDED : மே 30, 2024 11:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 30, 2024 11:21 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில், மாவட்ட இறகு பந்து சங்க பிரதிநிதிகளின் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு, மாவட்ட இறகு பந்து சங்க தலைவர் சாந்தி ஏஜன்சீஸ் ரவி தலைமை தாங்கினார். செயலாளர் கே.சி.எஸ்., நிறுவன உரிமையாளர் பிரதீப்சந்த் முன்னிலை வகித்தார். பொருளாளர் ஆக்சாலீஸ் பள்ளி தாளாளர் பாரத் வரவேற்றார்.

கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகளை நியமித்த தமிழ்நாடு இறகு பந்து சங்க மாநில தலைவர் அன்புமணி எம்.பி., பொதுச் செயலாளர் அருணாசலம் ஆகியோர்களுக்கு நன்றி தெரிவிப்பது.

வரும் ஜூன், ஜூலை மாதங்களில் மாவட்டம் முழுதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இறகு பந்து போட்டிகள் நடத்தி மாநில அணிக்கான மாணவர்களை தேர்வு செய்வது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட அரசு, தனியார் பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்கள், இறகு பந்து போட்டி பயிற்சியாளர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் அண்ணாமலை, வழக்கறிஞர் வி.சண்முகம், எஸ்.சண்முகம், சண்முகசுந்தரம், அன்பழகன், ஹனிபா பங்கேற்றனர். இணைச் செயலாளர் முபாரக் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us