ADDED : மே 22, 2026 08:44 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி 30ம் தேதி நடக்கிறது.
கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையம் பின்புறம் உள்ள ‘ஐ ஷெட்டல் ஸ்டுடியோவில்’ வரும் 30ம் தேதி மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி நடக்கிறது. இதில் 11 மற்றும் 13 வயதுக்குட்பட்டோருக்கு ஒற்றையர் பிரிவு போட்டி நடக்கிறது. அதேபோல், 15, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கு ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் போட்டி நடக்கிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் போட்டியில் பங்கேற்கலாம். விருப்பமுள்ள போட்டியாளர்கள் www.playmatches.com என்ற இணையதளம் மூலமாகவும், 78451 13557 என்ற எண்ணை தொடர்பு கொண்டும் வரும் 29ம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும். போட்டிக்கான ஏற்பாடுகளை கள்ளக்குறிச்சி மாவட்ட இறகுப்பந்து சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
