ADDED : ஆக 31, 2026 07:22 PM
அ நிறம் | அளவு
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் ம.தி.மு.க., மாவட்ட கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, மாவட்ட அவைத் தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். செயலாளர் ஜெய்சங்கர் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக ம.தி.மு.க., பொருளாளர் செந்திலதிபன் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், அண்ணா துரையின் 118 வது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து பேசினர்.
கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார், மாவட்ட பொருளாளர் சவுகத்அலி, ஒன்றிய செயலாளர் சேகர், வசந்தா சுந்தரம், மாவட்ட துணைச் செயலாளர் முனீர்கான், பொதுக்குழு உறுப்பினர் சரண், நிர்வாகிகள் சிவக்குமார், சுபாஷ், விஸ்வநாதன், கிருஷ்ணமூர்த்தி, இளையபெருமாள், வரதராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.
