/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாவட்ட கருவூல அலுவலகம் இடமாற்றம்
/
மாவட்ட கருவூல அலுவலகம் இடமாற்றம்
ADDED : மார் 09, 2025 11:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அரசு பள்ளி வளாகத்தில் இயங்கிய மாவட்ட கருவூலம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் அலுவலகத்தின் கூடுதல் அலுவலகங்கள் இயங்கி வந்தது. அதில் மாவட்டக் கருவூல அலுவலகமும் இயங்கி வந்தது.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி பழைய தாலுகா அலுவலக வளாகத்தின் முதல் தளத்திற்கு மாவட்ட கருவூலம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மாவட்டக் கருவூல அலுவலகத்தில் பணம் பெற்று வழங்கும் அனைத்துத் துறை அலுவலர்கள், அனைத்து ஓய்வூதியர்கள் மற்றும் பொதுமக்கள் பழைய தாலுகா அலுவலக வளாகத்திற்கு சென்று பயனடைய அறிவுறுத்தப்பட்டுள்ளது.