/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தி.மு.க., பூத் ஏஜன்ட் ஆலோசனை கூட்டம்
/
தி.மு.க., பூத் ஏஜன்ட் ஆலோசனை கூட்டம்
ADDED : பிப் 22, 2025 10:13 PM

ரிஷிவந்தியம்: சூளாங்குறிச்சியில் தி.மு.க., ஓட்டுச்சாவடி பூத் ஏஜன்ட் மற்றும் உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, தெற்கு ஒன்றிய செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் சுந்தர்ராஜன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராஜூ, மாவட்ட கவுன்சிலர் கோவிந்தராஜி முன்னிலை வகித்தனர். சுரேஷ் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர் ரிஷிவந்தியம் சட்டசபை தொகுதி தேர்தல் பார்வையாளர் பெருநற்கிள்ளி, வரும் 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளரை பெருவாரியான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
முதல்வர் ஸ்டாலின் மகளிர் நலனுக்காக செயல்படுத்தி வரும் திட்டங்களை மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும், கட்சி நிர்வாகிகள் எவ்வித பாகுபாடின்றி ஒன்றிணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும் என பேசினார்.
கூட்டத்தில், ஊராட்சி துணைத்தலைவர் சரவணன், இலக்கிய அணி அமைப்பாளர் செல்வகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

