/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தியாகதுருகம் நகர பகுதியில் தி.மு.க., வேட்பாளர் பிரசாரம்
/
தியாகதுருகம் நகர பகுதியில் தி.மு.க., வேட்பாளர் பிரசாரம்
தியாகதுருகம் நகர பகுதியில் தி.மு.க., வேட்பாளர் பிரசாரம்
தியாகதுருகம் நகர பகுதியில் தி.மு.க., வேட்பாளர் பிரசாரம்
ADDED : மார் 31, 2024 06:09 AM

தியாகதுருகம், : தியாகதுருகம் நகரில் தி.மு.க., வேட்பாளர் மலையரசன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளர் மலையரசன் தியாகதுருகம் நகர செயலாளராக உள்ளார்.
இவர் நேற்று தலைமை பொதுக்குழு உறுப்பினர் மணிமாறன் தலைமையில் தியாகதுருகம் நகர பகுதியில் பஸ் நிலையம், புக்குளம் பஸ் நிலையம், காந்தி நகர் உட்பட பல்வேறு பகுதிகளில் திறந்தவெளி வேனில் சென்று தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
மேலும் புக்குளம் பஸ் நிலையம் அருகே உள்ள சலவை தொழிலாளியுடன் சேர்ந்து துணிகளை அயன் செய்து ஆதரவு கோரினார்.
வி.சி., மாவட்ட செயலாளர் மதியழகன், மா.கம்யூ., மாவட்ட குழு உறுப்பினர் ஸ்டாலின் மணி, பேரூராட்சி சேர்மன் வீராசாமி, துணைச் செயலாளர் சங்கர் முன்னிலையில் தனது கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினருடன் வார்டு வாரியாக சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
அவைத் தலைவர் ராதாகிருஷ்ணன், நிர்வாகிகள் சிவகுமார், ராஜசேகர், அருட்செல்வன், பாலாஜி, சிலம்பரசன், அஜித்குமார், மகாதேவி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.

