ADDED : ஆக 29, 2024 08:20 AM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் தொகுதி, நகர தி.மு.க., சார்பில் பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
நகர அவைத் தலைவர் குணா தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர்கள் முருகன், கற்பகம், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், நகர செயலாளர் கோபிகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். இளைஞர் அணி அமைப்பாளர் நவநீதகிருஷ்ணன் வரவேற்றார்.
நகரப் பொருளாளர் தங்கராஜ், துணைச் செயலாளர்கள் நாராயணன், ஜெகன்நாத், கலையரசி, மாவட்ட பிரதிநிதிகள் கண்ணன், மாருதிசேஷன், சுப்ரமணியன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
வரும் 16ம் தேதி சென்னையில் நடைபெறும் முப்பெரும் விழாவில் திரளாக பங்கேற்பது, நுாற்றாண்டு நிறைவு விழாவை அனைத்து வார்டுகளிலும் எழுச்சியுடன் நடத்துவது, பொது உறுப்பினர் கூட்டங்கள் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.