/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
களத்தை சாதகமாக்க தி.மு.க, 2 வது சுற்றில் ரூ.100 விநியோகம்
/
களத்தை சாதகமாக்க தி.மு.க, 2 வது சுற்றில் ரூ.100 விநியோகம்
களத்தை சாதகமாக்க தி.மு.க, 2 வது சுற்றில் ரூ.100 விநியோகம்
களத்தை சாதகமாக்க தி.மு.க, 2 வது சுற்றில் ரூ.100 விநியோகம்
ADDED : ஏப் 17, 2024 11:31 PM
கள்ளக்குறிச்சியில் திராவிட கட்சிகள் ஓட்டுக்கு 300 ரூபாய் கொடுத்து முடித்த நிலையில், அ.தி.மு.க., வின் கை ஓங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து நேற்று தி.மு.க., மீண்டும் இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்து 100 ரூபாய் பண பட்டுவாடா செய்தது.
கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க., இடையே துவக்கம் முதலே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. ஆளும் தி.மு.க., விற்கு நிகராக அ.தி.மு.க., வும் களமாடி வருகிறது. சுவர் விளம்பரத்தில் துவங்கி, வேட்பாளர் அறிமுக கூட்டம், செயல்வீரர்கள் கூட்டம், கட்சித் தலைவர்களின் பொதுக்கூட்டம் என இருவருமே சலைக்காமல் தேர்தல் பணியில் மும்முரம்காட்டி வருகின்றனர்.
தி.மு.க., சார்பில் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் துணிவிருந்தால் தேர்தல் களத்தில் நின்று பார் என அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் குமரகுருவுக்கு சவால் விடுத்தார். அவர் விடுத்த அறைகூவலை ஏற்றுக் கொண்ட குமரகுரு, கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் போட்டியிட கட்சித் தலைமையிடம் சீட்டையும் பெற்றார்.
களத்தில் இறங்கிய குமரகுரு சவாலை ஏற்று தேர்தல் களத்திற்கு வந்திருப்பதாகவும், போட்டிக்கு தயார் என அறிவித்தார். வசந்தம் கார்த்திகேயனின் நிழலாக இருந்த மலையரசனுக்கு சீட்டை வாங்கி கொடுத்து போட்டி களத்தில் தானே இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கினார் வசந்தம்.
அனைவருக்கும் பரிச்சயமான அ.தி.மு.க., வின் மாவட்ட செயலாளரான குமரகுரு தனக்கான செல்வாக்கை நிரூபிக்க வசந்தத்திற்கு இணையாக செலவை கருத்தில் கொள்ளாமல் களமாடத் தொடங்கினார்.
தொகுதி தி.மு.க., விற்கு பாதகமாக இருப்பதாக உளவுத்துறையின் தகவல் தலைமைக்கு சென்றதால் தேர்தல் வியூகங்கள் மாற்றப்பட்டது. கடந்த 14ம் தேதியே ஓட்டுக்கு ரூ.300 விநியோகத்தை தி.மு.க., கட்சிதமாக செய்து முடித்தது. அ.தி.மு.க., வும் அதே அளவிற்கு பண பட்டுவாடாவை செய்தது. இதைத்தொடர்ந்து நேற்று தி.மு.க., இரண்டாவது சுற்றாக மீண்டும் ஓட்டுக்கு 100 ரூபாய் வீதம் விநியோகம் செய்ய துவங்கியுள்ளது.

