/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தி.மு.க., உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்
/
தி.மு.க., உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்
ADDED : செப் 08, 2024 06:50 AM

தியாகதுருகம்: தியாகதுருகம் தெற்கு ஒன்றிய தி.மு.க., உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். மலையரசன் எம்.பி., மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், ஒன்றிய சேர்மன் தாமோதரன், செயற்குழு உறுப்பினர் எத்திராஜ், அவைத்தலைவர் சாமிதுரை முன்னிலை வகித்தனர். தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., கட்சியின் முப்பெரும் விழாவை சிறப்பாக நடத்துவது, 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் பணிகள், கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.
துணைச் செயலாளர்கள் கணேசன், ராமலிங்கம், தேவி பழனிவேல், மாவட்ட பிரதிநிதிகள் கலியன், இளங்கோவன், பெருமாள், மாவட்ட கவுன்சிலர் பழனியம்மாள், மகளிரணி தலைவி சுகன்யா, நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.