/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குமரகுரு பொய் பிரசாரம் செய்கிறார் தி.மு.க., எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு
/
குமரகுரு பொய் பிரசாரம் செய்கிறார் தி.மு.க., எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு
குமரகுரு பொய் பிரசாரம் செய்கிறார் தி.மு.க., எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு
குமரகுரு பொய் பிரசாரம் செய்கிறார் தி.மு.க., எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு
ADDED : ஏப் 16, 2024 07:06 AM

தியாகதுருகம் : 'அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றுகிறார்' என தி.மு.க., எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன் பேசினார்.
தியாகதுருகம் ஒன்றிய கிராமங்களில் தி.மு.க., வேட்பாளர் மலையரசனை ஆதரித்து, வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., பிரசாரம் மேற்கொண்டார். தொகுதி பொறுப்பாளர் மாசிலாமணி, ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், அண்ணாதுரை, செயற்குழு உறுப்பினர் எத்திராஜ், மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், ஒன்றிய சேர்மன் தாமோதரன், வி.சி., மாவட்ட செயலாளர் மதியழகன் முன்னிலை வகித்தனர்.
வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., பொதுமக்களிடம் ஆதரவு கேட்டு பேசுகையில், 'திராவிட மாடல் ஆட்சியில் கிராமங்கள் முன்னேற்றம் அடைந்து வருகிறது. அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி வருகிறார்.
கள்ளக்குறிச்சி நகரைச்சுற்றி ரிங் ரோடு அமைத்து தருவேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார். ஆனால், இத்திட்டத்திற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சாலை அமைப்பதற்கான நிலம் ஆர்ஜிதம் செய்யும் பணி நடந்து வருகிறது.
இதுகூட தெரியாமல் ரிங் ரோடு அமைத்து தருவேன் என்று மக்களை ஏமாற்றுகிறார்.
தி.மு.க., வேட்பாளர் மலையரசன் எளிய விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இவர், மக்களின் பிரச்னைகளை நன்கறிந்து டில்லி வரை கொண்டு சென்று நல்ல திட்டங்களை செயல்படுத்துவார். எனவே உதயசூரியன் சின்னத்தில் ஓட்டளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்' என்றார்.
நிர்வாகிகள் சாமிதுரை, நுார்முகமது, கணேசன், நெடுஞ்செழியன், சுப்பு இளங்கோவன், கலியன், தேவி, பழனிவேல், நாகராஜன், பாலு, சண்முகம், அப்துல் கபூர், இப்ராஹிம், ஏழுமலை உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

