/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தி.மு.க., ஆட்சி மீது மக்கள் அதிருப்தி அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு பேச்சு
/
தி.மு.க., ஆட்சி மீது மக்கள் அதிருப்தி அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு பேச்சு
தி.மு.க., ஆட்சி மீது மக்கள் அதிருப்தி அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு பேச்சு
தி.மு.க., ஆட்சி மீது மக்கள் அதிருப்தி அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு பேச்சு
ADDED : ஏப் 11, 2024 05:09 AM

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அடுத்த சூளாங்குறிச்சியில் அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு பிரசாரத்தில் ஈடுபட்டார். அவருக்கு, ஒன்றிய செயலாளர் அருணகிரி தலைமையில் செண்டை மேளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரசாரத்தில் குமரகுரு பேசுகையில், 'சட்டசபை தேர்தலின் போது அறிவித்த வாக்குறுதிகளை தி.மு.க., அரசு நிறைவேற்றவில்லை. மின்சாரம், பால், சொத்து வரி, வீட்டு வரி, பத்திரவு பதிவு, அரிசி, பூண்டு, துவரம் பருப்பு என விலைவாசி உயர்ந்துள்ளது. அனைத்து மகளிருக்கும் மாதந்தோறும் ரூ,1,000 தருவதாக கூறி, சிலருக்கு மட்டுமே தருகின்றனர்.
தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப், மானிய விலையில் ஸ்கூட்டி, குழந்தை பாதுகாப்பு பெட்டகம் என முன்னாள் முதல்வர் ஜெ., அமல்படுத்திய திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அரசு பஸ்சில் பெண்களுக்கு இலவச பயணம் என கூறி, ஆண்களுக்கு கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். தி.மு.க., அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்' என்றார்.
பிரசாரத்தின்போது, எம்.எல்.ஏ., செந்தில்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., பிரபு, ஒன்றிய செயலாளர்கள் கதிர் தண்டபாணி, துரைராஜ், தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் கருணாகரன், துணை செயலாளர் கோவிந்தன், ஜெ., பேரவை செயலாளர் ஞானவேல், வழக்கறிஞர் பிரிவு சீனுவாசன், இளைஞர், இளம்பெண் பாசறை வினோத், அ.தி.மு.க., நிர்வாகிகள் சந்திரசேகரன், சின்னராஜ், வைத்தியநாதன், கஜேந்திரன், சண்முகம், கிருஷ்ணமூர்த்தி, மணிகண்டன், பாலமுருகன், கொளஞ்சி, மாரிமுத்து, வையாபுரி, அருள், ஸ்ரீராம், நாராயணன், ஸ்ரீதர் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

