/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தி.மு.க., நலத்திட்ட உதவி வழங்கல்
/
தி.மு.க., நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : மார் 07, 2025 11:28 PM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில், தி.மு.க., சார்பில், முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவையொட்டி நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நகர செயலாளர் கோபி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி, சைலோம், 4 முனை சந்திப்பு, காந்தி சிலை, சந்தப்பேட்டை டேனிஸ் மிஷன் மருத்துவமனை பகுதிகளில் பொதுமக்களுக்கு இனிப்பு, வேட்டி சேலை உள்ளிட்டவைகளை வழங்கினார்.
டேனிஸ் மிஷின் மருத்துவமனை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், நகராட்சி சேர்மன் முருகன், மாவட்ட ஒன்றிய குழு துணை சேர்மன் தங்கம், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், நகர அவை தலைவர் குணா, அரகண்டநல்லுார் பேரூராட்சி சேர்மன் அன்பு, தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி நாராயணன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.