ADDED : ஜூலை 09, 2026 11:03 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில், லயன்ஸ் சங்கம் சார்பில் மருத்துவ தின விழா நடந்தது.
விழாவிற்கு, லயன்ஸ் சங்க தலைவர் பேராசிரியர் நேரு தலைமை தாங்கினார். செயலாளர் டாக்டர் கண்ணன், பொருளாளர் டாக்டர் வினோத் முன்னிலை வகித்தனர். விழாவில் டாக்டர்கள் மகுடமுடி, வெங்கடேஷ், சங்கர், சம்பத்குமார், பாலதண்டாயுதபாணி, பிரதாப், சங்கரி, கோபி பாண்டுரங்கன், குலாம் முகமது ஜிலானி, பவித்ரா ஆகியோருக்கு சிறந்த மருத்துவர்களுக்கான விருதை லயன்ஸ் சங்க முன்னாள் ஆளுநர் குப்புசாமி வழங்கினார்.
லயன்ஸ் மண்டல தலைவர் வெங்கடேஷ், வட்டார தலைவர்கள் குணசேகரன், சங்க ஜி.எஸ்.டி., ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், லயன்ஸ் மூத்த நிர்வாகி ராஜா வாழ்த்திப் பேசினர். நிகழ்ச்சியை ராஜேந்திரன் தொகுத்து வழங்கினார்.
விழாவில் இன்னர்வீல் சங்க தலைவர் சிவசங்கரி உட்பட லயன்ஸ், இன்னர்வீல் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
