/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சங்கராபுரத்தில் நாய் தொல்லை; பொது மக்கள் கடும் அவதி
/
சங்கராபுரத்தில் நாய் தொல்லை; பொது மக்கள் கடும் அவதி
சங்கராபுரத்தில் நாய் தொல்லை; பொது மக்கள் கடும் அவதி
சங்கராபுரத்தில் நாய் தொல்லை; பொது மக்கள் கடும் அவதி
ADDED : செப் 01, 2024 11:04 PM
சங்கராபுரம் : சங்கராபுரம் நகரில் நாய் தொல்லையால் பொது மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
சங்கராபுரம் பகுதியில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. இவைகள் சாலையில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களை துரத்திச் சென்று கடிக்க பாய்கின்றன. இதனால், ஒரு சிலர் கீழே விழுந்து காயமடைந்துள்ளனர். நடந்து செல்பவர்களை குறிப்பாக சிறுவர்களை விட்டு வைக்காமல் துரத்தி அச்சுறுத்துகின்றன.
சமீபத்தில் நாய் கடியால் சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது.
சங்கராபுரம் நகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நாய்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரூராட்சி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.