/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குடிநீர் சப்ளை 'கட்': பொதுமக்கள் சாலை மறியல்
/
குடிநீர் சப்ளை 'கட்': பொதுமக்கள் சாலை மறியல்
ADDED : ஏப் 05, 2024 11:57 PM
கள்ளக்குறிச்சி: மூங்கில்பாடியில் தண்ணீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சின்னசேலம் அடுத்த மூங்கில்பாடி கிராமத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், வறட்சி மற்றும் மின்மோட்டார் பழுது உள்ளிட்ட காரணங்களால் கடந்த 10 தினங்களாக மூங்கில்பாடியில் குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் தண்ணீர் சப்ளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் மூங்கில்பாடி காலனி பஸ் நிறுத்தம் அருகே நேற்று காலை 9:30 மணியளவில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த சின்னசேலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சமாதான பேச்சு வார்த்தை நடத்தியதன் பேரில், 10:00 மணியளவில் கலைந்து சென்றனர்.

