/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஜி.அரியூரில் குடிநீர் விநியோகம் 'கட்' ; பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

ADDED : மே 02, 2024 11:58 PM

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அடுத்த ஜி.அரியூர் கிராமத்தில் குடிநீர் வராததை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.
திருக்கோவிலுார் அடுத்த ஜி.அரியூர் ஊராட்சிக்கு உட்பட்ட மெயின் ரோட்டின் பல பகுதிகளுக்கு கடந்த ஐந்து நாட்களாக குடிநீர் வரவில்லை என கூறப்படுகிறது. நேற்று காலையும் குடிநீர் வராததால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள் திருவண்ணாமலை - திருச்சி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த திருக்கோவிலுார் இன்ஸ்பெக்டர் பாலாஜி, சப் இன்ஸ்பெக்டர் நந்தகோபால் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டதை அடுத்து, விரைவில் பழுதடைந்த குடிநீர் பைப் லைன் சீர் செய்யப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.