/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கம்பத்தில் பஸ் மோதி டிரைவர் பலி
/
கம்பத்தில் பஸ் மோதி டிரைவர் பலி
ADDED : மே 26, 2024 06:07 AM
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே பெயர் பலகை கம்பத்தின் மீது ஓம்னி பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் டிரைவர் இறந்தார்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அடுத்த மல்காபுரம் கர்தாவரி பகுதியைச் சேர்ந்தவர் நாகண்ணா போமேஸ்வரராவ் 49; டிரைவர்.
இவர், 44 சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு தமிழ்நாட்டிலுள்ள சுற்றுலா தளங்களுக்கு செல்வதற்காக, ஓம்னி பஸ்சை ஓட்டி வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 12.30 மணிளவில் பஸ் உளுந்தூர்பேட்டை தாலுகா எறையூர்பாளையம் அருகே சென்றபோது அங்கியிருந்த பெயர் பலகை கம்பத்தின் மீது பஸ் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பஸ் டிரைவரான போமேஸ்வரராவ் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று போமேஸ்வரராவ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.