/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தியாகதுருகத்தில் டிரைவர் மாயம்
/
தியாகதுருகத்தில் டிரைவர் மாயம்
ADDED : ஆக 13, 2024 10:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தியாகதுருகம்: தியாகதுருகத்தில் டிரைவர் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தியாகதுருகம் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் விஸ்வநாதன், 45; தனியார் பள்ளி பஸ் டிரைவர். இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவருக்கு குழந்தைகள் இல்லை. இதனால் தனது மைத்துனர் ராஜ்குமார் வீட்டில் வசித்து வந்தார். கடந்த மாதம் 24ம் தேதி வெளியே சென்ற விஸ்வநாதன் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் ராஜ்குமார் தியாகதுருகம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து, விஸ்வநாதனை தேடி வருகின்றனர்.