/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஓட்டு எண்ணும் மையம் பகுதியில் டிரோன் கேமராக்கள் பறக்க தடை
/
ஓட்டு எண்ணும் மையம் பகுதியில் டிரோன் கேமராக்கள் பறக்க தடை
ஓட்டு எண்ணும் மையம் பகுதியில் டிரோன் கேமராக்கள் பறக்க தடை
ஓட்டு எண்ணும் மையம் பகுதியில் டிரோன் கேமராக்கள் பறக்க தடை
ADDED : ஏப் 30, 2024 08:00 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணும் மையம் பகுதியில் 2 கி.மீ., சுற்றளவில் டிரோன் கேமராக்கள் பறக்க தடை செய்து கலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவிட்டுள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் பதிவான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஓட்டு எண்ணும் மையமான அ.வாசுதேவனுார் மகாபாரதி பொறியியல் கல்லுாரியில் வைக்கப்பட்டுள்ளது. ஸ்டிராங் ரூம்கள் உட்பட ஓட்டு எண்ணும் மைய வளாகம் முழுதும் துப்பாக்கிய ஏந்திய மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை போலீசார், தமிழ்நாடு சிறப்பு படை போலீசார், கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசார் என மூன்றடுக்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், ஓட்டு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் மற்றும் கல்லுாரி வளாகம் முழுதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையில் அலுவலர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது சார்பில் முகவர்கள் கண்காணிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தீ தடுப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. கல்லுாரி வளாகம் முழுதும் தடையற்ற மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஓட்டு எண்ணும் மையத்தின் பாதுகாப்பை உறுதி செய்திடும் பொருட்டு ஓட்டு எண்ணும் மையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் 2 கி.மீ., சுற்றளவில் டிரோன் கேமரா உள்ளிட்ட வீடியோ கேமராக்கள், ஆளில்லா விமானம் போன்றவை பறக்க தடை செய்யப்பட்டுள்ளது.
ஓட்டு எண்ணிக்கை முடியும் நாள் வரை அப்பகுதி முழுதும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

