/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு
/
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு
ADDED : ஜூலை 04, 2024 09:57 PM
கள்ளக்குறிச்சி : சின்னசேலத்தில் கல்லுாரி மாணவர்களின் போதைப் பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
சின்னசேலம் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து துவங்கிய ஊர்வலத்தில், சின்னசேலம் லயன்ஸ் சங்கத்தினர் மற்றும் 240 மாணவர்கள் பங்கேற்றனர். ஊர்வலம் முக்கிய சாலை வழியாக, போதை தடுப்பு வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியும், பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்திச் சென்றனர்.
லயன்ஸ் கிளப் தலைவர் சரவணன், செயலாளர் ஏகாம்பரம், பொருளாளர் அரசு, கள்ளக்குறிச்சி டி.எஸ்.எம்., கல்வியியல் கல்லுாரி தலைவர் அசோக்குமார், லட்சுமி கல்வியியல் கல்லுாரி முதல்வர் பாஸ்கரன், பாலாஜி கல்வியியல் கல்லுாரி தலைவர் பழனிசாமி, பேராசிரியர் ராம்குமார், பாரதி கல்வியியல் கல்லுாரி முதல்வர் ஜெயக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.