/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆற்றில் இறைச்சி கழிவுகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு
/
ஆற்றில் இறைச்சி கழிவுகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு
ஆற்றில் இறைச்சி கழிவுகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு
ஆற்றில் இறைச்சி கழிவுகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு
ADDED : ஏப் 24, 2024 12:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : சங்கராபுரம் ஆற்றங்கரையோரம் இறைச்சி கழிவுகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
சங்கராபுரம் நகரில் மீன், கோழி, ஆடு இறைச்சி கடைகள் 50க்கும் மேற்பட்டவை உள்ளன. இவற்றில் உற்பத்தியாகும் இறைச்சி கழிவுகளை ஆற்றங்கரையோரம் கொட்டி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால், பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, ஆற்றங்கரையோரம் இறைச்சி கழிவுகள் கொட்டுவதை தடுக்க பேருராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.