/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தேர்தல் பறக்கும் படையினர் பணத்துடன் கார் பறிமுதல்
/
தேர்தல் பறக்கும் படையினர் பணத்துடன் கார் பறிமுதல்
ADDED : ஏப் 17, 2024 11:31 PM
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே வாக்காளர்களுக்கு விநியோகிக்க வைத்திருந்த பணத்துடன் காரை தேர்தல் பறக்கும் படையினர் பிடித்தனர்.
விழுப்புரம் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, திருக்கோவிலுார் சட்டசபை தொகுதி, தேர்தல் பறக்கும் படையைச் சேர்ந்த ஜவகர் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் நள்ளிரவு முகையூர் - கண்டாச்சிபுரம் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். கண்டாச்சிபுரம் தனியார் ஐ.டி.ஐ., அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த காரை சோதனை செய்ய சென்றபோது, காரில் இருந்தவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். காரில் ரூ. 2.25 லட்சம் பணம் இருந்தது. இதனை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் காரை கண்டாச்சிபுரம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை திருக்கோவிலுார் ஆர்.டி.ஓ., கண்ணனிடம் ஒப்படைத்தனர். அப்பொழுது தாசில்தார்கள் மாரியாப்பிள்ளை, கிருஷ்ணதாஸ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். வாக்காளர்களுக்கு பணத்தை விநியோகிப்பதற்காக எடுத்துச் சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

