/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் தேர்தல்
/
பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் தேர்தல்
ADDED : ஆக 13, 2024 09:29 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய இந்து துவக்க பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது.
தலைமை ஆசிரியர் தேவராஜன் தலைமை தாங்கினார். தேர்தல் பார்வையாளராக வட்டார வள மைய மேற்பார்வையாளர் கவிதா பங்கேற்றார். பள்ளி மேலாண்மை குழு தலைவராக கலையரசி மற்றும் 24 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
சிறப்பு விருந்தினர் மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனியாபிள்ளை வாழ்த்துரை வழங்கினார். புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆசிரியை வேதநாயகி நன்றி கூறினார்.