/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நேரத்தை மீறி பிரசாரம் தேர்தல் அதிகாரிகள் மவுனம்
/
நேரத்தை மீறி பிரசாரம் தேர்தல் அதிகாரிகள் மவுனம்
ADDED : ஏப் 07, 2024 05:32 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரவு நேரங்களில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி வேட்பாளர்கள் பிரசாரம் மேற்கொள்கின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி மற்றும் சங்கராபுரம் ஆகிய சட்டசபை தொகுதியில் உள்ள கிராமங்களில் பிரதான கட்சி வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேட்பாளருடன், அந்தந்த பகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ., ஒன்றிய சேர்மன், ஒன்றிய செயலாளர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் திறந்த வேனில் நின்று மக்களிடத்தில் பேசி ஆதரவு திரட்டி வருகின்றனர்.
தேர்தலுக்கு குறைந்த நாட்களே இருப்பதால், அனைத்து கிராமங்களுக்கும் சென்று பிரசாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், குக்கிராமங்களுக்கு செல்லாமல் ஊராட்சியில் மக்கள் அதிகமாக கூடும் ஒரு பகுதியில் மட்டும் நின்று பிரசாரம் செய்கின்றனர்.
குறிப்பாக, தினமும் 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரசாரம் செய்து முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஒரு இடத்தில் தாமதம் ஏற்பட்டாலும், குறிப்பிட்ட நேரத்தில் பிரசாரத்தை முடிக்க இயலாத சூழல் நிலவுகிறது. ஆனாலும், கிராமங்கள் என்பதாலும், தேர்தல் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் அலட்சியமாக இருப்பதாலும், இரவு 10:30 மணி வரை வேட்பாளர்கள் பிரசாரம் செய்கின்றனர்.

