/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
லஞ்சம் வாங்கிய மின் ஊழியர் 'சஸ்பெண்ட்'
/
லஞ்சம் வாங்கிய மின் ஊழியர் 'சஸ்பெண்ட்'
ADDED : ஆக 13, 2024 04:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கச்சிராயபாளையத்தில் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அலுவலக வணிக உதவியாளர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், வடக்கனந்தலைச் சேர்ந்தவர் வெங்கடாசலம்,45; கச்சிராயபாளையம் இளமின்வாரிய அலுவலகத்தில் வணிக உதவியாளராக பணிபுரிந்து வந்த இவர், கடந்த 9ம் தேதி வீட்டு மின் இணைப்பு வழங்க, ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.
இதனையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்து, மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) மயில்வாகனன் உத்தரவிட்டார்.