
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த பங்காரம் லட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மற்றும் எம்.ஆர்.எப்., நிறுவனம் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
கல்லுாரியில் நடந்த முகாமிற்கு, கல்லுாரி சேர்மன் மணிவண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் முருகப்பன், இயக்குனர் சரவணன், பொருளாளர் சாந்தி, ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். துணை முதல்வர் சக்திவேல் வரவேற்றார். முதல்வர் பழனியம்மாள் வாழ்த்திப் பேசினார்.
நிகழ்ச்சியில், எம்.ஆர்.எப்., நிறுவன பயிற்சி மற்றும் உற்பத்தி மேலாளர் சுரேஷ் வேலை வாய்ப்பு முகாமில் தேர்வான மாணவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்.
முகாமில் லட்சுமி கல்லுாரியில் படித்து பட்டம் பெற்ற மாணவர்கள் மட்டுமின்றி பல்வேறு கல்லுாரிகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். வணிகவியல் மேலாண்மை துறை தலைவர் பிரியா ஒருங்கிணைத்தார்.
துணை முதல்வர் சசிகலா நன்றி கூறினார்.