/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஏரி, மந்தைவெளி புறம்போக்கு இடங்கள் ஆக்கிரமிப்பு: மீட்க நடவடிக்கை தேவை
/
ஏரி, மந்தைவெளி புறம்போக்கு இடங்கள் ஆக்கிரமிப்பு: மீட்க நடவடிக்கை தேவை
ஏரி, மந்தைவெளி புறம்போக்கு இடங்கள் ஆக்கிரமிப்பு: மீட்க நடவடிக்கை தேவை
ஏரி, மந்தைவெளி புறம்போக்கு இடங்கள் ஆக்கிரமிப்பு: மீட்க நடவடிக்கை தேவை
ADDED : ஜூலை 22, 2024 01:13 AM

உளுந்துார்பேட்டை : பாதுாரில் ஏரி, மந்தைவெளி புறம்போக்கு இடங்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உளுந்துார்பேட்டை தாலுகா, பாதுார் பகுதியைச் சுற்றி 3 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகள் மூலம் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களுக்கு பாசனம் செய்து வருகின்றனர். ஆனால், ஏரிகளின் பல பகுதிகளை ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.
ஏரிகளில் நீர் நிரம்பினால் கால்நடைகளின் மேய்ச்சலுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடும் என்பதற்காக மந்தைவெளி புறம்போக்கு இடத்தல் தனியாக ஒரு ஏக்கர் பரப்பளவிற்கும் அதிகமாக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
பல தலைமுறைகளாக இருந்து வந்த இந்த இடங்களை தற்போது அக்கிரமிப்பாளர்கள் வண்டல் மண் கொட்டி ஆக்கிரமித்து பிளாட்டுக்களாக மாற்றி வருகின்றனர். ஏரி, குளங்களை ஆக்கிரமித்ததோடு கால்நடைகளின் மேச்சலுக்காக இருந்த இடங்களையும் ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமித்து வருவதால் அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகமும், வருவாய்த் துறையினரும் உடனடி நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பாளர்களின் பிடியிலிருந்து நீர்நிலைகளையும், மந்தவெளி புறம்போக்கு இடங்களையும் மீட்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.