/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஏ.கே.டி., கல்லுாரியில் பொறியாளர் தினம்
/
ஏ.கே.டி., கல்லுாரியில் பொறியாளர் தினம்
ADDED : செப் 17, 2024 06:04 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., நினைவு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் பொறியாளர் தினம் கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு கல்லுாரியின் தாளாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் லட்சுமிபிரியா, நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.
மின்னியல் துறை தலைவர் அலாவுதீன் வரவேற்றார்.
பொறியாளர் தினத்தையொட்டி மாணவ மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு கல்லுாரி முதல்வர் சிவக்குமரன் பரிசு வழங்கினார்.
விழாவில் பொறியாளரின் செயல்திறன், தேசத்தின் பங்களிப்பு குறித்து மாணவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.
கட்டடவியல் துறை தலைவர் வெங்கடேஷ் மார்ஷல் ராமன் நன்றி கூறினார்.

