ADDED : ஜூன் 26, 2026 04:10 PM
அ நிறம் | அளவு
சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த வடசெட்டியந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுற்றுச் சூழல் தின விழிப்புணர்வு மற்றும் பசுமை கோடை முகாம் நடந்தது.
வட்டாரக் கல்வி அலுவலர் சீனுவாசன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை லட்சுமி வரவேற்றார். மாணவர்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம், மரம் வளர்ப்பின் அவசியம், சிறு தானிய உணவு வகைகளின் பயன்பாடு, இயற்கை உணவுகளின் மருத்துவ குணங்கள் குறித்து ஆசிரியர்கள் விளக்கினர். தொடர்ந்து, பாரம்பரிய சிறுதானிய உணவு கண்காட்சி நடந்தது.
விழாவில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள், ஊர் முக்கிய பிரமுர்கள் பங்கேற்றனர். ஆசிரியர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.
