/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஜூலை 30, 2024 11:23 PM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ஜே.எஸ்., குளோபல் அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி முதல்வர் ஜெயலட்சுமி தலைமை தாங்கினார். துணை முதல்வர் பாபு முன்னிலை வகித்தார். சுற்றுச்சூழல் மாசுபாடு, பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்தல், மரம் வளர்ப்பதின் அவசியம், நீரின்றி அமையாது உலகு என்பது உட்பட பல்வேறு தலைப்புகள் குறித்து ஆசிரியர்கள் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தொடர்ந்து, ஜே.எஸ்., பள்ளி மாணவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று, எஸ்.பி., ரஜத்சதுர்வேதியிடம் மரக்கன்றுகளை வழங்கினர். அங்கு பணிபுரியும் போலீசாருக்கும் மா, எலுமிச்சை, நெல்லி, தென்னை உள்ளிட்ட மரக்கன்றுகளை வழங்கி, அலுவலக வளாகத்தில் மரக்கன்றினை நட்டனர்.
பள்ளி ஒருங்கிணைப்பாளர்கள் ஆனந்த், ஜீவிதா, குப்பன், உடற்கல்வி ஆசிரியர் பாக்கியராஜ், பணியாளர்கள் சுரேஷ், சைமன், பரத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.