
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கச்சிராயபாளையம் : கல்வராயன்மலையில் 5,400 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கண்டுபிடித்து அழித்தனர்.
கச்சிராயபாளையம் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையில் கரியாலுார் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் தனிப்படை போலீசார் கல்வராயன்மலையில் உள்ள சிறுகளூர் கிராமத்தில் நேற்று ரோந்து சென்றனர்.
மேற்கு மலை வனப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக 18 பிளாஸ்டிக் பேரல்களில் மறைத்து வைத்திருந்த 5,400 லிட்டர் சாராய ஊறல் இருந்தது தெரிந்தது. சாராய ஊறலை போலீசார் சம்பவ இடத்திலேயே கொட்டி அழித்தனர்.

