/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முன்னாள் படை வீரர் குறைகேட்பு கூட்டம்
/
முன்னாள் படை வீரர் குறைகேட்பு கூட்டம்
ADDED : ஆக 17, 2024 03:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறைகேட்பு கூட்டம் வரும் 23ம் தேதி மாலை 4 மணிக்கு கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடக்கிறது.
கூட்டத்தில் முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவரை சார்ந்தோர் மற்றும் படையில் பணிபுரிந்து வருவோரது குடும்பத்தினர் பங்கேற்கலாம். மேலும் கோரிக்கையினை தனி தனி மனுக்களாக தெளிவாக எழுதி இரு பிரதிகளுடன் அடையாள அட்டையை சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும்.
இத்துடன் முன்னாள் படை வீரர்கள் அசல் படைப்பணிச் சான்றுடன் வருகைபுரிந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்டுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.