/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
'மாஜி' ராணுவ வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்
/
'மாஜி' ராணுவ வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்
ADDED : பிப் 28, 2025 05:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் முன்னாள் முப்படை ராணுவ வீரர்கள் நலச்சங்கத்தின் சிறப்பு கூட்டம், சங்க அலுவலகத்தில் நடந்தது.
ஓய்வுபெற்ற ராணுவ வீரர் முஜிர்கான் தலைமை தாங்கினார். கல்யாண குமார், சேகர் முன்னிலை வகித்தனர்.
ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்ட முன்னாள் முப்படை நல அலுவலக துணை இயக்குனர் ஆயிஷா பேகம் கலந்து கொண்டு, காக்கும் கரங்கள் திட்டத்தைப் பற்றி விளக்கினார். மேலும், ஊனமுற்ற முன்னாள் ராணுவ வீரர்களுக்கு மின்சார மூன்று சக்கர வாகனம், வீல் சேர் பெற அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கஅறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் பலரும் பங்கேற்றனர்.

