/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கல்விக் கட்டண சலுகைக்கான தேர்வு ஏ.கே.டி., பள்ளியில் இன்று நடக்கிறது
/
கல்விக் கட்டண சலுகைக்கான தேர்வு ஏ.கே.டி., பள்ளியில் இன்று நடக்கிறது
கல்விக் கட்டண சலுகைக்கான தேர்வு ஏ.கே.டி., பள்ளியில் இன்று நடக்கிறது
கல்விக் கட்டண சலுகைக்கான தேர்வு ஏ.கே.டி., பள்ளியில் இன்று நடக்கிறது
ADDED : ஏப் 09, 2024 04:45 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில், அனைத்து பள்ளி 10ம் வகுப்பு மாணவர்களுக்கான கல்விக் கட்டண சலுகை தேர்வு இன்று 9ம் தேதி நடக்கிறது.
இது குறித்து பள்ளி நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் கூறியதாவது:
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில் பெற்றோர்களின் பொருளாதார சுமை, மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு கல்விக் கட்டண சலுகை அளிப்பதற்கான தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கட்டண சலுகைத் தேர்வு, இன்று 9ம் தேதி காலை 10:00 மணிக்கு நடக்கிறது.
அனைத்து பள்ளி 10ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில வழி பயிலும் மாணவ, மாணவிகள் தேர்வில் பங்கேற்கலாம். 10ம் வகுப்பு பாடங்களின் அடிப்படையில் வினாக்கள் இடம் பெறும். ஒரு மதிப்பெண் வினா அடிப்படையில் 100 மதிப்பெண்ணுக்கு கேட்கப்படும். மதிப்பெண் அடிப்படையில் 25 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை பிளஸ் 1, பிளஸ் 2 படிப்பதற்கான கட்டண சலுகைகள் வழங்கப்படுகிறது.
மாணவர்கள் தேர்வில் கலந்து கொள்ள வசதியாக பள்ளி நிர்வாகம் சார்பில் இலவச பஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடலுார், திண்டிவனம், குறிஞ்சிபாடி, நெய்வேலி, சிதம்பரம், பெண்ணாடம், விழுப்புரம், வானுார், செஞ்சி, மேல்மலையனுார், திருக்கோவிலுார், திருவண்ணாமலை, திருவெண்ணெய்நல்லுார், விருத்தாசலம், ஆத்துார் ஆகிய ஊர்களில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகிறது. தேர்வில் பங்கேற்கும் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்படும்.
இவ்வாறு ராஜேந்திரன் கூறினார்.

