/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாவட்ட தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நீட்டிப்பு

ADDED : ஜூலை 26, 2024 04:41 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள தொழிற்பிரிவுகளுக்கு நேரடி சேர்க்கை மூலம் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இதில், நடப்பு கல்வியாண்டில் நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் வரும் 31ம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விரும்புபவர்கள் வரும் 31ம் தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு உளுந்துார்பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் 9944618626, சங்கராபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் 9442867335, சின்னசேலம் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் 9488385638 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு கேட்டறியலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.