/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு கல்லுாரியில் சேர அவகாசம் நீட்டிப்பு
/
அரசு கல்லுாரியில் சேர அவகாசம் நீட்டிப்பு
ADDED : மே 22, 2024 12:14 AM
ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்புகளில் சேர விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்லுாரி முதல்வர் தெரிவித்துள்ளார்.
ரிஷிவந்தியம் அரசு கல்லுாரி முதல்வர் (பொ) மணிகண்டன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
வாணாபுரம் அடுத்த அரியலுார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி இயங்குகிறது. இங்கு பி.ஏ., தமிழ், பொருளாதாரம், பி.எஸ்.சி., கணினிஅறிவியல், புள்ளியியல், பி.காம்., வணிகவியல் உள்ளிட்ட 5 பாடப்பிரிவுகள் உள்ளன. அரசு கல்லுாரியில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் www.tngasa.in என்ற இணையதளத்தில் வரும் 20ம் தேதி விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், அதிக மாணவ, மாணவிகளை சேர்ப்பதற்காக விண்ணப்பிக்க கூடுதலாக 4 நாட்கள் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவ, மாணவிகள் வரும் 24ம் தேதி மாலை 5:00 மணிக்குள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

