/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கல்வராயன்மலையில் சாராய ஊறல் அழிப்பு
/
கல்வராயன்மலையில் சாராய ஊறல் அழிப்பு
ADDED : ஏப் 26, 2024 12:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலை பகுதியில் 600 லிட்டர் சாராய ஊறல்களை போலீசார் கண்டுபிடித்து அழித்தனர்.
கள்ளக்குறிச்சி எஸ்.பி., சமய்சிங் உத்தரவின் பேரில் கச்சிராயபாளையம் சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் நேற்று மாலை 3.௦௦ மணியளவில் கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள பரங்கிநத்தம் கல்படை ஆறு பகுதி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு 3 பிளாஸ்டிக் பேரல்களில் தயாராக வைத்திருந்த 600 லிட்டர் சாராய ஊறல்களை கண்டு பிடித்து அழித்தனர்.
தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சிய மட்டப்பாறை வெள்ளி மகன் ராஜேந்திரன் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

