/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கல்வராயன்மலையில் சாராய ஊறல் அழிப்பு
/
கல்வராயன்மலையில் சாராய ஊறல் அழிப்பு
ADDED : ஜூன் 16, 2024 10:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கல்வராயன்மலையில் 3000 லிட்டர் சாராய ஊறல்களை போலீசார் அழித்தனர்.
கள்ளக்குறிச்சி எஸ்.பி., சமய்சிங்மீனா உத்தரவின் பேரில் கச்சிராயபாளையம் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் கல்வராயன்மலையில் உள்ள நீலபள்ளம் வனப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக வைத்திருந்த 3000 லிட்டர் சாராய ஊறல்கள் மற்றும் 60 லிட்டர் சாராயத்தை கண்டுபிடித்து அங்கேயே கொட்டி அழித்தனர்.
தொடர்ந்து இதில் தொடர்புடைய குரும்பலுார் பகுதியைச் சேர்ந்த பூபதி என்பவர் மீது கரியாலுார் போலீசார் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.