ADDED : பிப் 24, 2025 01:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை ; முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்த நாளையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க., மற்றும் சென்னை ராதாத்ரி நேத்ராலயா கண் மருத்துவமனை இணைந்து, உளுந்துார்பேட்டையில் இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தியது. மாவட்ட செயலாளர் குமர குரு, தலைமை தாங்கினார்.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி கோவிந்தராஜ் மற்றும் மருத்துவ அணி நிர்வாகிகள் செய்தனர்.
முன்னாள் எம்.பி., காமராஜ், டாக்டர்கள் பொன்னராசு, அப்துல்ரசாக், தினேஷ்ஹர்விராஜ், அருள்பாண்டியன், கலாநிதி, நவநீதம், மாவட்டத் துணைச் செயலாளர் பரமாத்மா, ஒன்றிய செயலாளர்கள் ஏகாம்பரம், சுப்புராயன், நகர செயலாளர்கள் துரை, ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.